Skip to content

சொல் பொருள்

வேடன்

சொல் பொருள் விளக்கம்

வேடன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hunter

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து – நற் 59/3,4

பகல்நேரத்து முயலை தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேடன் தன் தோள்களில் சுமந்துவந்த
பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து

கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் – நற் 189/7,8

கொலைத்தொழிலில் வல்ல வேடன் விரித்த வலையினின்றும் தப்பிப்பறந்துபோன
காட்டுப்புறாவின் சேவல்

பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
————- ————- ———————-
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – அகம் 36/1-6

பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
——————— ——————- ————————
தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,

இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெரும் கல் அடார் – புறம் 19/5,6

பெரும் புலியைப் படுக்கும் வேட்டுவன் எந்திரம் அறிந்து கொளுத்திய
பெரிய கல்லையுடைய அடாரையும்

யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே – புறம் 214/4,5

யானை வேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்
குறும்பூழ் வேட்டைக்குப்போவோன் வறிய கையினனாயும் வருவன்.

நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116

வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்

இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/4,5

மனையின்கண் இயங்கும் மடப்பத்தையுடைய மயில் போன்ற மனைவியை அகப்படுத்திக்கொள்ளும்
சொல்லாகிய வலையையுடைய வேட்டைக்காரனாயினன் முன்பு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *