சொல் பொருள்
விரும்பினோம்,
சொல் பொருள் விளக்கம்
விரும்பினோம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we longed for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்டோளே யாயே யாமே நனைய காஞ்சி சினைய சிறு மீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க என வேட்டேமே– ஐங் 1 வாழ்க ஆதன்! வாழ்க அவினி! நெல் பலவாக விளைக; பொன்வளம் பெரிதும் சிறப்பதாக என்று தாய் விரும்பி வேண்டினாள் தலைவி; நாங்களோ அரும்புகள் கொண்ட காஞ்சி மரமும், கருவுற்று முட்டைகளையுடைய சிறிய மீன்களும் வாழும் புதுவருவாய் மிகுந்த ஊரினைச் சேர்ந்த எம் தலைவன் வாழ்க, அவனது பாணனும் வாழ்க என்று விரும்பி வேண்டினோம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்