சொல் பொருள்
வேட்டையாடும் தொழில்
வேட்டை – வாய்ப்பு, வாய்ப்பாகக் கிடைத்தல், இன்பு
சொல் பொருள் விளக்கம்
வேட்டையாடுவது ஆடுபவர்க்கு இன்புப் பொருளாக இருக்கலாம். ஆனால் ஆடப்படும் உயிர்க்குத் தீராத் துன்பாதல் வெளிப்படை. சுட்ட சுட்ட குறியெல்லாம் வாய்த்துவிட்டால் வேட்டையர் கொண்டாட்டத்தில் தலைகால் தெரியாமல் மகிழ்வர். அதில் இருந்து வேட்டை என்பதற்கு வாய்ப்புப் பொருளும் இன்புப் பொருளும் வாய்த்தன. வணிகர் செல்வம் ஈட்டுதல் வேட்டை! அரசியலார் பொருளீட்டல் பெரு வேட்டை! பதவியால் வேண்டியவெல்லாம் தேடிக் கொள்ளல் தனிவேட்டை! காமுகர் நினைத்தவை நிறைவேறல் கொள்ளை வேட்டை! இப்படி வேட்டைக் காடாகக் குமுகாயம் அமைவதும், அறிவுடையோரும் உணர்வுடையோரும் கூட வேட்டையராகத் திரிவதும் நல்ல அடையாளம் ஆகாது!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Hunting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரியல் அம் புகவின் அம் கோட்டு வேட்டை நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/5-8 கள்ளாகிய உணவையும், அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும், வரிசைப் பட்ட ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான அழிசி என்பானின் ஆர்க்காடு போன்ற இவளின் குற்றம் தீர்ந்த சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர் –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்.
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்