சொல் பொருள்
சூட்டு(தல்)
சொல் பொருள் விளக்கம்
சூட்டு(தல்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
adorn, as with string of flowers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/34-40 ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர் இழுத்துச் செல்ல, அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு, அதனைக் கொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, “இது தானாகவே எங்கிருந்தோ வந்து என் கூந்தலில் சூட்டிக்கொண்டது” என்று சொல்ல, “இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில் நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது” ஆய் தொடி அரிவை கூந்தல் போது குரல் அணிய வேய்தந்தோயே – அகம் 104/16,17 ஆராய்ந்த வளையலையுடைய தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தை அணியச் சூட்டினாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்