சொல் பொருள்
முள், கழி போன்றவற்றால் ஓர் இடத்தைச் சுற்றி அமைக்கப்படும் அரண், இருபது மா கொண்ட ஒரு நில அளவு
சொல் பொருள் விளக்கம்
முள், கழி போன்றவற்றால் ஓர் இடத்தைச் சுற்றி அமைக்கப்படும் அரண், இருபது மா கொண்ட ஒரு நில அளவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fence, hedge, 6.67 acres
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126 உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும் விரி கடல் வேலி வியல்அகம் விளங்க – சிறு 114 பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 246,247 செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம், ஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல்லை விளைச்சல் ஆக வேலி ஆயிரம் விளைக நின் வயலே – புறம் 391/21
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்