Skip to content

admin

உய்யானம்

சொல் பொருள் அரசர் விளையாடும் காவற் சோலை சொல் பொருள் விளக்கம் அரசர் விளையாடும் காவற் சோலை. (சிலம்பு. 14: 127. அடியார்.)

உய்த்துணர்வோர்

சொல் பொருள் வெளிப்படாத பொருளை ஏதுக்களால் உணர்வோர். சொல் பொருள் விளக்கம் வெளிப்படாத பொருளை ஏதுக்களால் உணர்வோர். (திருக்கோ. 236. பேரா.)

உம்பற்காடு

சொல் பொருள் யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும் சொல் பொருள் விளக்கம் உம்பற் காடென்பது யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும். (அகம் 357. வேங்கடவிளக்கு)

உப்பு

சொல் பொருள் ‘சுவைபார்த்தல்’ என்னும் பொருளில் உப்புப் பார்த்தல் பருத்தல் என்னும் பொருளில் வரும் ‘உப்புதல்’ சொல் பொருள் விளக்கம் உப்புணா எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும் செந்நீரையும் எலும்பையும் செழுமை செய்து வலுவூட்டி… Read More »உப்பு

உப்பாடு

சொல் பொருள் உப்பு + ஆடு = உப்பாடு. நீருப்பு – ஊறவைத்த காய் (ஊறுகாய்) சொல் பொருள் விளக்கம் (துளுமொழியில்) உப்பாடு – ஊறுகாய். உப்பு + ஆடு = உப்பாடு. நீருப்பு… Read More »உப்பாடு

உத்தரம் தக்கணம்

சொல் பொருள் வடதிசைக்கு உத்தரம் என்றும், தென் திசைக்குத் தக்கணம் என்றும் பெயர்; உ = உயர்வு; தக்கு= தாழ்வு. சொல் பொருள் விளக்கம் ஒரு காலத்தில் பனிமலை கடலுக்குள் முழுகியும் தென்பெருங் கடல்… Read More »உத்தரம் தக்கணம்

உணர்வு

சொல் பொருள் அறிவுடைமை உலகியலால் செய்யத் தகுவது அறிதல் சொல் பொருள் விளக்கம் உணர்வு என்பது அறிவுடைமை. அஃதாவது உலகியலால் செய்யத் தகுவது அறிதல்.(தொல். பொருள். 273. பேரா.)

உண்மை

சொல் பொருள் உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். சொல் பொருள் விளக்கம் உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். (தொல். எழுத்து. 256. சி. கணேச.)

உண்டை

சொல் பொருள் உருண்டை திரள் வடிவினை உணர்த்தல் சொல் பொருள் விளக்கம் ‘உண்டை’ திரள் வடிவினை உணர்த்தல் திவாகரத்துள் காண்க. உருள் என்னும் முதனிலையிற்றோன்றிய ‘உருண்டை’ என்னுஞ் சொல் இடைக்குறைந்து ‘உண்டை’ என்றாயிற்று. (திருவாசக… Read More »உண்டை

உடைமை

சொல் பொருள் உடைமை சார்பொருளும் புறப்பொருளுமே சுட்டின. சொல் பொருள் விளக்கம் உடைமை என்ற சொல் தமிழில் உடை என்பதினின்றும், அவ் உடை என்பதும் உடு என்பதினின்றும் பிறந்துள்ளதனைக் காணலாம். உடை என்பது உடலுக்குப்… Read More »உடைமை