Skip to content

admin

உடை

உடை

உடை என்பது ஒரு வகை முள் புதர் மரம். 1. சொல் பொருள் (பெ) குடைவேல்மரம், குடைவேலம், குடை மரம்; உடம்பைச் சூழ்ந்திருக்கும் உடை எனப்படுவது புறப்பற்றுக்களின் துவக்கம் 2. சொல் பொருள் விளக்கம் இது… Read More »உடை

உடன் கூட்டம்

சொல் பொருள் அதிகாரிகள் சொல் பொருள் விளக்கம் அரசன், தான் விரும்பியவாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவன் எனினும் பல அதிகாரிகள் உடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம் இவ்வதிகாரிகளை “உடன் கூட்டத்ததிகாரிகள்” என்று கல்வெட்டுக்களும், செப்பேடுகளும்… Read More »உடன் கூட்டம்

உட்பகை

சொல் பொருள் அஃதாவது புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகை. சொல் பொருள் விளக்கம் அஃதாவது புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகை.(திருக். உட்பகை. பரி.)

உட்கொள்ளும் வகைகள்

அசைத்தல் – விலங்குபோல் அசையிட்டுத் தின்னுதல்; அதுக்குதல் – சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்; அரித்தல் – பூச்சி புழுப் போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்ததுதல் – சிறிது சிறிதாய்த்… Read More »உட்கொள்ளும் வகைகள்

ஈற்றா

சொல் பொருள் கடுஞ்சூல் நாகு அன்றிப் பலகால் ஈன்ற ஆவை. (திருக்கோ. 382. பேரா) சொல் பொருள் விளக்கம் ஈற்றா: ஈற்றா என்றது, கடுஞ்சூல் நாகு அன்றிப் பலகால் ஈன்ற ஆவை. (திருக்கோ. 382.… Read More »ஈற்றா

ஈழவர்

சொல் பொருள் மக்கள் பற்பல சமயங்களில் தமிழ் நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ் நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். இங்ஙனம் கொண்டு வரப்பட்டவரும் குடியேறியவருமே ஈழவர் எனப்பட்டனர். சொல் பொருள் விளக்கம் மக்கள்… Read More »ஈழவர்

ஈழம்பூட்சி

சொல் பொருள் கள் இறக்குவதற்குச் செலுத்த வேண்டிய வரி சொல் பொருள் விளக்கம் ஈழம்பூட்சி என்பது கள் இறக்குவதற்குச் செலுத்த வேண்டிய வரியாகும். (முதற்குலோத்துங்க சோழன். 88.)

ஈதா

சொல் பொருள் இந்தா சொல் பொருள் விளக்கம் ஈதா என்பது ஒரு மரூஉ முடிபு; அஃது இக்காலத்து ‘இந்தா’ என்று வழங்கப்படும். (பரிபாடல். 6: 60. பரி.)

ஈதல்

சொல் பொருள் அளித்தல், இடுதல், வழங்கல் சொல் பொருள் விளக்கம் (1) அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலையும், இடுதல் என்பத கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க்கீதலையும் ; வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருள்தல்… Read More »ஈதல்