Skip to content

admin

சுற்றம் சூழல்

சொல் பொருள் சுற்றம் – உடன் பிறந்தவர், கொண்டவர் கொடுத்தவர் என்பவர் சுற்றம் ஆவர்.சூழல் – சுற்றத்தார்க்குச் சுற்றமாக அமைத்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர். சொல் பொருள் விளக்கம் சுற்றமும் சூழலும்… Read More »சுற்றம் சூழல்

சுழிவு நெளிவு

சொல் பொருள் சுழிவு – திறமையாக நடந்து கொள்ளல்.நெளிவு – பணிவாக நடந்துக் கொள்ளல். சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சாதிக்க விரும்புவார் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக்… Read More »சுழிவு நெளிவு

சுண்டு சுழி

சொல் பொருள் சுண்டு – நரம்பு சுண்டி இழுக்கும் ஒரு நோய்.சுழி – தலை முதலிய இடங்களில் மயிர் சுழித்து அமையும் ஓர் அமைப்பு. சொல் பொருள் விளக்கம் முன்னதைச் சுண்டு வாதம் என்பர்… Read More »சுண்டு சுழி

சீலை துணி

சொல் பொருள் சீலை – புடைவைகள்.துணி – மற்றைத் துணிகள். சொல் பொருள் விளக்கம் ‘சீரை’ என்னும் பழஞ் சொல்லில் இருந்து வந்தது ‘சீலை’யாம். இதனைச் சேலை என வழங்குதல் இதன் மூலமறியார் பிழையாம்.… Read More »சீலை துணி

சீராட்டும் பாராட்டும்

சொல் பொருள் சீராட்டு – ஒருவருக்கு அமைந்துள்ள சிறப்புகளை எடுத்துக் கூறுதல்.பாராட்டு – ஒருவரைப் பற்றிய ஆர்வத்தால் புகழ்ந்து கூறுதல்; புனைந்து கூறுதலுமாம். சொல் பொருள் விளக்கம் சீர்-சிறப்பு; இவண் சிறப்பைக் கூறுதல் ஆயிற்று.… Read More »சீராட்டும் பாராட்டும்

சீர் செனத்து

சொல் பொருள் சீர் – சிறந்த பொருள் வாய்ப்புசெனத்து – மக்கட் கூட்டம். சொல் பொருள் விளக்கம் சீர் சிறப்பு என்பதில் சீர் என்பதன் பொருளைக் காண்க. சிறந்த பொருள்களைப் பரிசாக வழங்குவதுடன், பெருங்கூட்டச்… Read More »சீர் செனத்து

சீர் சிறப்பு

சொல் பொருள் சீர் – சிறந்த பொருள்களை உவந்து தருதல்.சிறப்பு – முகமும் அகமும் மலரச் சிறந்த மொழிகளால் பாராட்டுதல். சொல் பொருள் விளக்கம் சீர் வரிசை: சீர் செய்தல் எனத் திருமண விழா,… Read More »சீர் சிறப்பு

சின்னா பின்னா(சின்னம் பின்னம்)

சொல் பொருள் சின்னம் – தனிமைப்படுத்துதல்பின்னம் – சிதைவுபடுத்துதல் சொல் பொருள் விளக்கம் போர்க்களத்தின் நிகழ்வாக ‘சின்னா பின்னம்’ என்பது வழங்கும். போரில் புகுந்து ஒருவனை வீழ்த்தவேண்டும் எனின், அவனை முதற்கண் மற்றை வீரர்களிடத்திருந்து… Read More »சின்னா பின்னா(சின்னம் பின்னம்)

சின்னது நணியது

சொல் பொருள் சின்னது – இடைப்படக் குறுகுறு நடக்கும் சிறுகுழந்தை.நணியது – பிறந்து அணியதாம் குழந்தை. சொல் பொருள் விளக்கம் சின்னது நணியது எல்லாரும் நலமா?’ என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல்-நெருக்கம் அண்மை.… Read More »சின்னது நணியது

சிறுவர் சிறியர்

சொல் பொருள் சிறுவர் – சிறிய வயதுடையவர்.சிறியர் – சிறுமைத்தன்மையுடையவர். சொல் பொருள் விளக்கம் முன்னது அகவை கருதியது; பின்னது, தன்மை கருதியது. இரண்டும் பால்பொதுமை கருதியவை. சிறியர் என்பதைச் “செயற்கரிய செய்வார் பெரியார்… Read More »சிறுவர் சிறியர்