Skip to content

admin

இசிபதம்

சொல் பொருள் ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். சொல் பொருள் விளக்கம் ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். குளிரால் வரும் நோய் இழுவை;… Read More »இசிபதம்

இசித்தல்

சொல் பொருள் இசித்தல் என்பதற்கு உலர்தல் பொருள் கொள்கின்றனர் பரமக்குடி வட்டாரத்தார். சொல் பொருள் விளக்கம் ஈரப்பொருள் தரும் இசித்தல் என்பது, அதன் நீரை இழுக்கப்பட்ட நிலையில் உலர்தல் என்னும் பொருள் தந்தது. அப்பொருளில்… Read More »இசித்தல்

ஆற்றி (அகற்றி)

சொல் பொருள் ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும் சொல் பொருள் விளக்கம் ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும்.… Read More »ஆற்றி (அகற்றி)

ஆற்றமாட்டாதவன்

சொல் பொருள் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர் சொல் பொருள் விளக்கம் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர். ஆற்றுதல், செயலாற்றுதல். ஒன்றுக்கும் உதவாதவன், உழையாதவன் என்பது… Read More »ஆற்றமாட்டாதவன்

ஆளாதல்

சொல் பொருள் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு சொல் பொருள் விளக்கம் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு. அதுவரை சிறுபிள்ளை புரிவு தெரியாதவள் என்றும், இப்பொழுது பெரியவள், புரிவு தெரிந்தவள் என்றும்… Read More »ஆளாதல்

ஆள்வீடு

சொல் பொருள் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும் சொல் பொருள் விளக்கம் முன்பகுதியும் குறியாமல் பின்பகுதியும் குறியாமல் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும். இது நாட்டுக்கோட்டையார் வழக்கு. குடும்பத்து ஆள்களே தங்கியும்… Read More »ஆள்வீடு

ஆள் காந்தி

சொல் பொருள் வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது எரிந்து விழுபவளை ஆள் காந்தி என்பது கோட்டாறு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது… Read More »ஆள் காந்தி

ஆரியம்

சொல் பொருள் கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். ‘ஆரியம்’ என்னும் மொழிப் பெயர் பொதுவழக்கு. சொல் பொருள் விளக்கம் கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப்… Read More »ஆரியம்

ஆரச் சுவர்

சொல் பொருள் வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை… Read More »ஆரச் சுவர்

ஆயான்

சொல் பொருள் ஆக்களுக்கு ஆயன்போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர் சொல் பொருள் விளக்கம் ஆயன் ஆக்களை வளர்ப்பவன். மேய்ப்பன் என்பானும் அவன். புத்தர் கிறித்து திருமூலர் கண்ணன் ஆனாயர் என்பார் குருத்துவ… Read More »ஆயான்