Skip to content

admin

தளுக்குதல்

சொல் பொருள் தளுக்குதல் – நடிப்பால் மயக்குதல் சொல் பொருள் விளக்கம் தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர்.… Read More »தளுக்குதல்

தள்ளமாட்டாமை

சொல் பொருள் தள்ளமாட்டாமை – அகற்ற முடியாத நெருக்கம் சொல் பொருள் விளக்கம் ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத்தம்மால் தாங்கக்கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீரவேண்டிய கட்டாய… Read More »தள்ளமாட்டாமை

தலையைக் குலுக்கல்

சொல் பொருள் தலையைக் குலுக்கல் – மறுத்தல் சொல் பொருள் விளக்கம் தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்குதலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை, தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை. ஆட்டுதல் என்பது ஒரு முறை இரு… Read More »தலையைக் குலுக்கல்

தலையில் அடித்தல்

சொல் பொருள் தலையில் அடித்தல் – உறுதி கூறல் சொல் பொருள் விளக்கம் ‘தலையில் அடித்துச் சொல்கிறேன்’ என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதி மொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின்… Read More »தலையில் அடித்தல்

தலையிடுதல்

சொல் பொருள் தலையிடுதல் – பங்கு கொள்ளல்; ஊடுபுகுதல்; தீர்த்துவைத்தல் சொல் பொருள் விளக்கம் “எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை” என்பது, பங்கு கொள்ளவேண்டா, ஊடுபுக வேண்டா என்னும் பொருளாக… Read More »தலையிடுதல்

தலையாட்டிப் பிழைப்பு

சொல் பொருள் தலையாட்டிப் பிழைப்பு – ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று சொல்லிப் பிழைத்தல் சொல் பொருள் விளக்கம் தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்வதை அன்றி மறுப்பதே… Read More »தலையாட்டிப் பிழைப்பு

தலை முழுகல்

சொல் பொருள் தலை முழுகல் – தீர்த்துவிடல், ஒழித்துவிடல் சொல் பொருள் விளக்கம் சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்க தலை முழுகுதல் தமிழர் வழக்கம். ‘எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒரு… Read More »தலை முழுகல்

தலைதடவல்

சொல் பொருள் தலைதடவல் – சுரண்டுதல், முழுவதும் பறித்தல் சொல் பொருள் விளக்கம் தலையில் ஈரும் பேனும் சேர்ந்துவிட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிய அல்லது சுரண்டநேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால்… Read More »தலைதடவல்

தலைகாட்டாமை

சொல் பொருள் தலைகாட்டாமை – முன்வராமை சொல் பொருள் விளக்கம் தலை என்பது உறுப்பைக் குறியாமல், உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது. பல… Read More »தலைகாட்டாமை

தலைகவிழ்தல்

சொல் பொருள் தலைகவிழ்தல் – இழிவுறுதல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும்போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலைகவிழ்தல் இயற்கை. தலைகவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவதாயிற்று.… Read More »தலைகவிழ்தல்