Skip to content

admin

சிங்கி தட்டல்

சொல் பொருள் சிங்கி தட்டல் (சாலராப்போடல்) – ஒத்துப்பேசுதல். சொல் பொருள் விளக்கம் சிங்கி ஒரே சீராக ஒரே போக்காக ஒலித்துக் கொண்டிருப்பதாம். இதனை இசைக்க, மற்றை மற்றைக் கருவியிசைஞர்க்கு வேண்டுவது போல் பெரிய… Read More »சிங்கி தட்டல்

சிக்கெடுத்தாற் போலிருத்தல்

சொல் பொருள் சிக்கெடுத்தாற் போலிருத்தல் – தொல்லை தீர்தல் சொல் பொருள் விளக்கம் தலையை நீராட்டிப் பேணுதல், எண்ணெய் தேய்த்தல், தலைவாருதல் இல்லாக்கால் சிக்கு உண்டாம். கற்றை கற்றையாய்ச் சடையும் உண்டாம். நூற்கண்டு கயிறு… Read More »சிக்கெடுத்தாற் போலிருத்தல்

சாய்தல்

சொல் பொருள் சாய்தல் – படுத்தல், உறங்குதல், இறத்தல் சொல் பொருள் விளக்கம் மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் ‘சாய்தல்’ எனப்படுவதாயிற்று. சிலர், “கொஞ்சம்… Read More »சாய்தல்

சாப்பாடு போடல்

சொல் பொருள் சாப்பாடு போடல் – திருமணம் செய்தல் சொல் பொருள் விளக்கம் நண்பர்களுக்குள்ளும் அன்பர்களுக்குள்ளும் திருமண அகவையுடையவர்களெனின், “என்ன எப்பொழுது சாப்பாடு போட எண்ணம்?” போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே… Read More »சாப்பாடு போடல்

சாடிக்கு ஏற்றமூடி

சொல் பொருள் சாடிக்கு ஏற்றமூடி – கணவனுக்கு ஏற்ற மனைவி சொல் பொருள் விளக்கம் கலத்தின் மேல்வாயும், மூடியின் உள்வாயும் பொருந்தியமையச் செய்யப்படும். அதனையே சாடிக்கு ஏற்றமூடி எனல் வழக்கு. ‘செப்பின் புணர்ச்சி’ என… Read More »சாடிக்கு ஏற்றமூடி

சலசலப்பு

சொல் பொருள் சலசலப்பு – அச்சுறுத்தல் சொல் பொருள் விளக்கம் “இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்?” என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால்… Read More »சலசலப்பு

சருகுபோடுதல்

சொல் பொருள் சருகுபோடுதல் – வெற்றிலை போடுதல், உவப்புறுதல் சொல் பொருள் விளக்கம் சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும், அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்துபோன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும்… Read More »சருகுபோடுதல்

சதங்கை கட்டல்

சொல் பொருள் சதங்கை கட்டல் – ஆடவிடல் சொல் பொருள் விளக்கம் ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம் அவ்வழக்கம், ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலில் இருந்து வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து… Read More »சதங்கை கட்டல்

சட்டியெடுத்தல்

சொல் பொருள் சட்டியெடுத்தல் – இரந்துண்ணல் சொல் பொருள் விளக்கம் ஓடெடுத்தல் போல்வது சட்டியெடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி – மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. காவியர், பெரிதும்… Read More »சட்டியெடுத்தல்

சங்கைப்பிடித்தல்

சொல் பொருள் சங்கைப்பிடித்தல் – நெருக்குதல் சொல் பொருள் விளக்கம் சங்கு உயிர்ப்பான இடம்; மூச்சுக் காற்றுச் செல்லும் வழியன்றோ அது. அதனை நெருக்குதல் உயிர்வளிப் போக்கைத் தடுப்பதாம். ‘சங்கை ஒதுக்குதல்’ என்பதும் இதுவே.… Read More »சங்கைப்பிடித்தல்