ஈ என்றால் ஒரு பறக்கும் பூச்சி, கொடு என்று பொருள்
1. சொல் பொருள்
1. (வி) கொடு, வழங்கு,
2. (பெ) ஒரு பறக்கும் பூச்சி, தூய்மையற்ற இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி.
3. (பெ) இங்கே, அருகில்
4. (பெ) இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும்.
2. சொல் பொருள் விளக்கம்
“ஈ‘ என்ற தமிழ்ச் சொல்லைப் பல்லை வெளியே திறந்து காட்டாமல் உச்சரிக்க முடியாது. ‘ஈ‘ என்பவன் உடையவன் முன்னர் ஒரு முறைதான் பல்லைக் காட்டுகிறான். ஆனால் ‘ஈயேன்’ என்பவனோ இல்லாதவன் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை ‘ஈ‘ என்றும் ‘யேன்’ என்றும் பல்லைக்காட்டி ஆக வேண்டியிருக்கிறது. ஆகவே இது மிகமிக இழிந்த நிலையாயிற்று. (தமிழ் உள்ளம். 120.)
தூய்மையற்ற இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
give, offer, housefly, Musca domestica, Here
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஈ என இரத்தல் இழிந்தன்று – புறம் 204/1
கொடு என்று மன்றாடிக் கேட்டல் இழிந்தது
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
ஈக்கள் மொய்க்கின்ற கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
இங்கே பார், தெரிகிறது எமது சிறிய நல்ல ஊர்.
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய், “நீ எமக்கு
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
‘கொடுங்கள்’என்று பணிந்து கேட்டால், சிறப்புடைய
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
எனக்குக் கொடுப்பாய் என்று இரந்துவேண்டுவது எனக்குக் கடினமான செயல், நீ அந்தப் பரிசிலைக்
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்