சொல் பொருள்
(பெ) 1. வேல், 2. வாள்,
சொல் பொருள் விளக்கம்
1. வேல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lance, sword
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு காழ் எஃகம் பிடித்து எறிந்து – பதி 90/36,37 அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி காம்பையுடைய வேலினைப் பிடித்துப் பகைவர் மீது எறிந்து திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4 திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்