சொல் பொருள்
சூடாகப்பேசுதல் – சினந்து பேசுதல்
சொல் பொருள் விளக்கம்
உள்ளம் வெதும்பிப் பேசுவதால் சூடாகப் பேசுதல் எனப்படும். வன்மையாகச் சொல்லும் சொல் “சுடு சொல்” எனப்படும். “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்பதும் “வில்லம்பு சொல்லம்பு” எனவரும் வழக்கும், “நின் குலத்தைச் சுட்டதடா என் வாயிற் சொல்” எனவரும் கம்பர் தனிப்பாட்டும் சூடாகப் பேசுதல் சுடு சொல் என்பவற்றை விளக்கும். உள்ளத்தின் சூடு, சொல்லின் சூடாகக் குறிக்கப்படுகிறதாம். தண்ணிய நாட்டில் சூடாகப் பேசுதல் இனிமைப் பொருளாம். வெப்ப நாட்டில் சூடாகப் பேசுதல் தீமைப் பொருளாம். இவற்றைக் கருதுக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்