சொல் பொருள்
(வி) 1. தங்கு, 2. அடை, எய்து, 2. (பெ) சிவப்பு,
சொல் பொருள் விளக்கம்
தங்கு, அடை, எய்து, சிவப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dwell, abide, get, obtain, redness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும் கல் அகத்தது எம் ஊரே – நற் 276/5-7 உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில், காட்டு மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும் மலைகளுக்கிடையே அமைந்தது எமது ஊர்; கனவின் தொட்டது கை பிழை ஆகாது நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/103-105 கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல் நனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும், ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/3,4 தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்