சொல் பொருள்
(பெ) 1. யமன், 2. துலைக்கோலின் சமன்வாய்,
சொல் பொருள் விளக்கம்
யமன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Yama, the God of Death.
Pointer of a balance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/21,22 உலகத்தைத் தீய்த்து அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும், மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்