சொல் பொருள்
குறைவுபடு, சுருங்கிப்போ, இளை
சொல் பொருள் விளக்கம்
குறைவுபடு, சுருங்கிப்போ, இளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
diminish, be abated
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் புலம்கடை மடங்க தெறுதலின் ஞொள்கி நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/1-4 தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய் நிலம் (வெடித்து) நிலைபெயருமோ இன்று என உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
நன்றி,நல்ல முயற்சி!