Skip to content

சொல் பொருள்

(வி) (பயிர் முதலியன) கருகு, வாடு,

(பெ) 1. நெருப்பு, 2. தீமை,

தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொது வழக்கு

தீ என்பது அழகு என்னும் பொருளில் அம்பா சமுத்திர வட்டார வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொது வழக்கு. தீ என்பது அழகு என்னும் பொருளில் அம்பா சமுத்திர வட்டார வழக்காக உள்ளது. தீவாக = அழகாக. இதனை நோக்க, நீர் சூழ்ந்த நிலப்பகுதியாம் தீர்வு (தீவு) தரும் காட்சியின்பம் துய்த்த பேற்றால் தீவு அழகு என்னும் பொருளில் வழங்கித் ‘தீ’ என அமைந்திருக்கலாம். தீவாக என்னும் சொற்றொடர் வழக்கும் இதனை விளக்கும். ‘தீயாக’ என வராமை அறிய வேண்டும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be withered or blighted, as growing crops in times of drought;, fire, evil

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடு என்றார் – கலி 11/10,11

வீட்டின் இன்பமான சூழ்நிலையைக் கைவிட்டுப் பிரிந்துசென்று, இலைகள் தீய்ந்துபோன உலர்ந்த மரக் கிளைகளால்
நிழலின்றித் துன்புறும் தன்மை கொண்டது பாலைக்காடு என்றார்

மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 419,420

(ஆடுகளின்)உடலை உரித்துச் செய்த (வார்)மிதித்த தோலாலான படுக்கையில்,
நெருப்பே துணையாக தங்கிப் போவீர்

அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – நற் 36/6,7

புறங்கூறும் வாயையுடைய மகளிரின் வம்புமொழிகளோடு சேர்ந்து
உயர்வற்ற தீய சொற்களை கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *