Skip to content

சொல் பொருள்

(பெ) தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை,

சொல் பொருள் விளக்கம்

தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sweet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171

வேய் பெயல் விளையுள் தேன் கள் தேறல்
மூங்கில் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவை

தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6

தேம் கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
தேமாவின் கனியை உண்ணும் முள் போன்ற கூரிய எயிற்றினையும் செவ்விய வாயினையும்

தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3

சிறுதேர் உருட்டி விளையாடும் இனிய மொழிகளைப் பேசும் புதல்வன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *