Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நாக்கு, 2. மணியின் நாக்கு, 3. பேச்சுத்திறன், பாடும்திறன், ஓதும்திறன்,

சொல் பொருள் விளக்கம்

நாக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tongue, clapper of a bell, ability to speak, sing or recite

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்
நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11

முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்
நல்ல நாவினை ஒத்த சிறிய பாதங்களையும்,

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்

நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13

ஓதும்திறனில் வன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *