Skip to content

சொல் பொருள்

தள்ளு, முறி

சொல் பொருள் விளக்கம்

தள்ளு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

push, thrust aside, cut down

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம்
– பரி 16/45,46

காற்றால் எடுக்கப்பெற்ற மூங்கில் மேலே கிளர்ந்து, அக்காற்றின் தள்ளுதலால் உயர்ந்து தாக்குதலால்
தேன் சோர்ந்து விழும் வரையை ஒக்கும் தோற்றம்

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பில்
– பரி 9/27,28

சந்தன மரங்களையுடைய ஊழால் மெலிந்த கரையை முறித்து வையைப்புனல் கொண்டுவந்த
வயிரம்பாய்ந்த சந்தனத்தினது புகை சூழ்ந்த மாலையையுடைய மார்பில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *