சொல் பொருள்
அழி, வருந்து, (துணி) இற்றுப்போ, இழை இழையாகப்பிரி, சுட்டுப்பொசுக்கு, சுட்டு வதக்கு
சொல் பொருள் விளக்கம்
அழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ruin, destroy, be distressed, (cloth) be worn out, roast and make dwindle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7 அகன்ற இடம் அமைந்த பெரிய ஊரினைத் தீ எரிப்பதானாலும் எரித்து அழிக்கட்டும் நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி உகுவது போலும் என் நெஞ்சு – கலி 33/16,17 இதுகாறும் நொந்திருந்த மரக்கிளைகள் இப்போது நம்மைப்பார்த்துச் சிரிப்பது போல் மலர்களால் நிறைந்துள்ளன, வருந்தி அதை நினைந்து உடைந்து சிதறுவது போல் ஆனது என் நெஞ்சம் நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/11 இற்றுப்போய் கரைகிழிந்து கிடந்த எனது உடையையும் பார்த்து இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302 பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்