Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பரப்பு, பரவுதல், 2. நெசவுப்பா, பாவு நூல்,

சொல் பொருள் விளக்கம்

1. பரப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

expanse, spreading out, warp

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190

மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப

பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/7,8

பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு

படு மணி இரட்டும் பா அடி பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/3,4

ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோடொன்று மாறி இசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடைய
உயர்ந்த நல்ல யானையினையும்தேரையும் குதிரையையும்

துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/4

ஆடை ஆய்ந்து நெய்யுங்கால் பாவானது விரிந்தது போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *