சொல் பொருள்
பிக்கல் – பங்காகச் சொத்தைப் பிரித்துக் கொண்டு போதல்.
பிடுங்கல் – இடை இடையே பங்காளியரும் பிறரும் வலிந்து பறித்துக் கொண்டு போதல்.
சொல் பொருள் விளக்கம்
பிக்கல்-பிய்த்தல், பிரித்தல், பொருளுக்கு உரிமையுடையார் செயல். பிடுங்கல், பொருள் மேல் பற்றால் உரிமை இல்லாரும் இளக்கம் கண்டு வலிந்து பிடுங்கிக் கொண்டு போதல். “பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை” என்று பாராட்டுவது உண்டு. பிடுங்குதல் வழிப்பறி போல்வதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்