Skip to content

சொல் பொருள்

  1. (வி) (பாம்பு)படமெடு,

2. (பெ) 1. பசுமை – வளமை, செல்வச்செழிப்பு, 2. பசுமை – குளிர்ச்சி, 3. பாம்பின் படம்,  4. துணி தோல், காகிதம் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்,

3. (பெ.அ) பார்க்க : பைம்

சொல் பொருள் விளக்கம்

(பாம்பு)படமெடு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

spread the hood as a cobra

prosperity, flourishing condition

coolness

hood of a cobra

bag, sack

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 69

படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,

பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 105

பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்

கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 259

குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே – குறு 268/3,4

விரைந்து இடிக்கின்ற இடியால் பாம்புகளின் படம் மடங்கும்படி,
இடியுடன் கலந்து மழை இனிதாகப் பெய்தது

ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி – நற் 142/3

தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *