சொல் பொருள்
விரும்பு, மேன்மை, உயர்வு,
சொல் பொருள் விளக்கம்
விரும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire, eminence, excellence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24 அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று கூறுவது போல் காட்டி பின்னர் அவன் விரும்பும் வழியில் விரும்பிச் செல்வாயாக நெஞ்சமே! புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் ஏ கல் மீமிசை மே தக மலரும் பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/4-6 உள்ளீடற்ற காயைக் கொண்ட கொன்றையின் கிளைகளில், அழகாகக் கொடிபோன்ற பூங்கொத்து பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மேன்மை பொலிய மலர்கின்ற, பிரிந்திருப்போர் வருந்தும், அரிதினில் பெறும், கார்காலத்திலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்