சொல் பொருள்
(பெ) கருங்குரங்கு,
சொல் பொருள் விளக்கம்
கருங்குரங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
black monkey
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/12-14 “அகன்ற பாறையில் அமர்ந்திருக்கும் கருங்குரங்கை, மிரட்சியுடன் பார்த்து, கீழே இருண்டுகிடக்கும் செங்குத்தான பள்ளத்தில் ஏறியும் இறங்கியும் ஓடித்திரியும் வருடை மானின் குட்டியையுடைய வளமிக்க மலையைச் சேர்ந்தவனை நாக நறு மலர் உதிர யூகமொடு மா முக முசு கலை பனிப்ப – திரு 302,303 சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்