சொல் பொருள்
வேகாது – நடைபெறாது
சொல் பொருள் விளக்கம்
“அந்தப் பருப்பெல்லாம் இங்கு வேகாது” என்பதொரு மரபுத் தொடர். பருப்பு சில வகைத் தண்ணீரில் வேகும். சில வகைத் தண்ணீரில் வேகாது. கடுந்தண்ணீர், பருப்பு வேவதற்கு உதவாது. அதுபோல் சிலர் ஏமாற்று அல்லது பசப்புதல் சிலரிடம் எடுபடுவதோ ஏற்கப்படுவதோ இல்லை. அத்தகையர் மேற்சொன்ன மரபுத் தொடரை வழங்குவர். புரிந்து கொண்டவர்க்கு – நாலும் தெளிந்தவர்க்கு – ஏமாற்றுவார் இயல்பு வெட்ட வெளியாதலால் அவர்களிடம் செல்லாது என்பதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்