Skip to content

சொல் பொருள்

கவர்தல், கவ்வுதல்

சொல் பொருள் விளக்கம்

கவர்தல், கவ்வுதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

seizing, snatching

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/83,84

நாம் அறிந்தோம், ஒருவரிடத்தும் பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைக் கவர்ந்துகொள்ளும் என்பதனை;

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50

நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/13

முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றம் இழைத்திருந்தால் அவரின் உயிரைக் கவர்தல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *