சொல் பொருள்
இன்றியமையாமை
தலைக் கழகத்து இலக்கணமாய் இருந்தது அகத்தியம்.
சொல் பொருள் விளக்கம்
தலைக் கழகத்து இலக்கணமாய் இருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழு இலக்கணமாய் இருந்ததினால் தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கே இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வரவேண்டுமாயின். அவரைத் தாங்கள் அகத்தியமாய் வர வேண்டும் என்று அழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு.
(சொல். கட். 15.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்