அகழி என்பது நீரரண்
1. சொல் பொருள்
(பெ) இயற்கையாக அமைந்த நீரரண், கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும் நீரரண், நீர் நிரம்பிய பள்ளம்.
2. சொல் பொருள் விளக்கம்
பண்டைக்காலத்தில் அரசர்கள் கோட்டையை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க அதைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தில் அகழி அமைப்பு உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தெண் கடல் குண்டு அகழி/சீர் சான்ற உயர் நெல்லின் – மது 86,87
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி/வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை – பதி 53/8,9
பார் உடைத்த குண்டு அகழி/நீர் அழுவ நிவப்பு குறித்து – புறம் 14/5,6
குரூஉ கெடிற்ற குண்டு அகழி/வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/10,11
நில வரை இறந்த குண்டு கண் அகழி/வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் – புறம் 21/2,3
கராஅம் கலித்த குண்டு கண் அகழி/இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி – புறம் 37/7,8
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் – பதி 71/12
செ வாய் எஃகம் வளைஇய அகழின்/கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/9,10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது