Skip to content

அக்காள்

சொல் பொருள்

தமக்கை. உடன் பிறந்தோருள் வயதால் மூத்த பெண்ணை அக்காள் என்பது மரபு.

சொல் பொருள் விளக்கம்

துயரக் கடவுளாம் மூதேவி, செல்வக் கடவுளாம் சீதேவிக்கு மூத்தவள் என்ற புராணக் கதை பரவிய பிறகு அக்காள் என்றால் மூதேவி என்னும் பொருளைத் தரத் தொடங்கிவிட்டது. “அவன் வீட்டில் அக்காள் குடியிருக்கிறாள்” என்றால் அவன் வறியன் என்று பொருள். அக்காள் என்ற சொல் இழிபொருளைப் பெற்று விட்டது. தமக்கை என்ற சொல் அதன் இடத்தைப் பற்றிக் கொண்டது. (பழந்தமிழ். 71)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *