சொல் பொருள்
அங்கதம் என்பது வசை
சொல் பொருள் விளக்கம்
அங்கதம் என்பது வசை; அதனை இருவாற்றால் கூறுக என்பான் இதுகூறினான்… வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருள் அங்கதம் எனப்படும்… வசைப் பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பு அங்கதம். மாற்றரசனையும், அவன் இளங்கோவினையும் வசை கூறுமாறு போலாது தம் கோனையும் அவன் இளங்கோனையும் வசை கூறுங்கால் தாங்கி உரைப்பர்; அவை போலப் பழிப்பன என்றவாறு. (தொல். பொருள். 437-8. பேரா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்