சொல் பொருள்
அசைபோடல் – உண்ணுதல், எண்ணுதல்.
சொல் பொருள் விளக்கம்
ஆடு மாடுகள் அசைபோடுதல் உடையவை. அவை அசை போட்டுத் தீனி தின்னும், அவற்றைப் போல் சிலர் எப்பொழுதும் எதையாவது மென்று கொண்டேயிருப்பர். அவர்களிடம் என்ன, “அசைபோடுகிறீர்களா?” “என்ன பஞ்சசமானாலும் உங்களுக்கு அசைபோடல் நில்லாது” என்பதுண்டு. புல் கண்ட இடத்தில் மேய்ந்து, நீர் கண்ட இடத்திலே குடித்து, நிழல் கண்ட இடத்திலே படுத்து அசை போடும் மாடு களைக் காண்பார் அசைபோடல் விளக்கம் பெறுவார். இனி எண்ணுதலை ‘அசை போடுதல் என்பது அறிவாளர் வழக்கம். மீள மீளக் கொண்டு வந்தும் புரட்டியும் மாற்றியும் எண்ணுதல் அசையிடுவது போன்றதாகலின் அப்பொருளுக்கும் ஆயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்