சொல் பொருள்
அச்சின் கடைசியில் சொருகும் ஆணி
அச்சு-உருள் கோத்த மரம்; ஆணி – உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது.
சொல் பொருள் விளக்கம்
சக்கரம் கழலாதவாறு அச்சின் கடைசியில் சொருகும் ஆணி.
அச்சு-உருள் கோத்த மரம்; ஆணி – உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவால் சிறிதாய் இருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து. (திருக். 667. பரி.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Key part of Axle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. - திருக்குறள் 667 உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி!
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்