சொல் பொருள்
அஅச்சொடிதல் – பெருஞ்சேதம் ஏற்படல்; பேரிழப்பு ஏற்படல்
சொல் பொருள் விளக்கம்
பெருஞ்சேதம் ஏற்படல்; பேரிழப்பு ஏற்படல்; ஆகிய வற்றால் எதிர்பாரா வகையில் சொத்தையெல்லாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டால் அச்சை ஒடித்து விட்டது என்றோ அச்சொடிந்து விட்டது என்றோ சொல்வது வழக்கம்.
வண்டியில் உள்ள ஓர் உறுப்பு அச்சு. அவ்வச்சு திரண்ட இரும்பால் ஆயது. அது ஒடிந்து விட்டால் ஒடிந்த இடத்தை விட்டு வண்டி நகராது. அதுபோல் ஒருவர் செயலொழிந்து போகுமாறு திடுமென்று ஏற்படும் பொருள் இழப்பு அச்சொடிதல் எனப்படும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்