சொல் பொருள்
அடக்கம் – மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்குதல்.
ஒடுக்கம் – பணிவுடன் ஒடுங்கி நிற்றல்.
சொல் பொருள் விளக்கம்
“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல்” “அடக்கம் அமரருள் உய்க்கும்” “புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” – என்பவை அடக்கம். “சென்னி மண்ணுற வணங்கி வாசச், சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து மற்றைச் சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்” இது கைகேயி முன்னர் இராமன் நின்ற பணிவுநிலை. இஃது ஒடுக்கம்.
சான்றோர் ஒடுங்கிய இடம் ஒடுக்கம் எனப் பெறுதலையும் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்