சொல் பொருள்
அடிசால் – விதை தெளிப்பதற்காக அடிக்கும் சால்
பிடிசால் – தெளித்த விதையை மூடுவதற்காக அடிக்கும் சால்.
சொல் பொருள் விளக்கம்
வேளாண்மைத் தொழில் வழியாக வழங்கப் பெறும் இணைச்சொல் இது. சால் என்பது உழுபடைச்சால் என்பதன் சுருக்கம். உழுபடையாவது கலப்பை. மண்ணைக் கலக்க வைக்கும் கலப்பை. பொதுநிலை உழவு விடுத்து, ஆழ உழுதல் சாலடித்தல் எனப்படும். சாலடித்தல் விதை தெளிப்பதற்கும் பாத்தி கட்டுதற்கும் இடனாக அமையும். உழுதடத்தில் விதை போடுதல் ‘சால்விதை’ எனப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்