சொல் பொருள்
அடிப்பொடி – தொண்டர்
சொல் பொருள் விளக்கம்
அடி – காலடி; பொடி – தூசி தூள். காலடியில் பட்ட தூள்; எனப் பொருள் குறித்தாலும், அடிபட்ட இடத்தில் உள்ள மண்ணை எடுத்து வழிபடும் பொருள்போலப் பூசிக் கொள்ளு வாரை அடிப்பொடி என்பர். சிவனியர்க்குப் பொடி – திருநீறு; மாலியர்க்குப் பொடி – திருமண்.
தொண்டரடிப்பொடி யாழ்வார் நாலாயிரப்பனுவலார்.
கம்பன் அடிப்பொடி கணேசனார் அணித்தே வாழ்ந்தவர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்