சொல் பொருள்
அடிவிலை – ஊன்விலை
சொல் பொருள் விளக்கம்
மாடு விற்பதற்காகத் தாம்பணிக்குக் கொண்டு செல்வர். அங்குக் குறைந்த விலைக்குக் கேட்டால், “அடிவிலைக்குக் கேட்கிறாயா?” ‘வேலை செய்யும் மாடு இது” என்பர். அடிவிலை என்பது கறியின் விலையைக் கணக்கிட்டு ஊன் உணவுப் பொருளுக்காகக் கொண்டு செல்லப்படும் மாடாகும். அடிவிலை என்பது மாடடித்துக் கொன்று கூறு போட்டு விலைக்கு விற்பார், வாங்கும் விலையாகும். அத்தகு மாடுகள் அடிமாடுகள் எனப்படும். அடித்தல் – கொல்லுதல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்