Skip to content

அடுத்தும் தொடுத்தும்

சொல் பொருள்

அடுத்தல் – இடைவெளிப்படுதல்
தொடுத்தல் – இடைவெளிப்படாமை.

சொல் பொருள் விளக்கம்

அண்டை வீடு, அடுத்தவீடு என்பதையும், அண்டியவர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை, தொடர்வண்டி, தொடர்கதை, தொடர்பொழிவு இவற்றால் தொடுத்தல் பொருளை அறிக.

“ அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா” – மூதுரை

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *