சொல் பொருள்
அடுப்பில் பூனை கிண்டுதல் – சமைக்கவும் இயலா வறுமை
சொல் பொருள் விளக்கம்
பூனை அழகு உயிரியாக மேலை நாட்டில் வளர்ப்பது உண்டாயினும், அப்பழக்கத்தை மேற்கொள்ளும் நம்நாட்டாரும் அதற்காக வளர்ப்பது உண்டாயினும், எலி பிடிப்பதற்காக வளர்ப்பதே பெரும்பான்மையாம். எலி சுவரைத் துளைத்துக் குடியிருக்கும். ஆனால் அடுப்பில் வளையமைத்துக் குடியிருக்குமா? பல நாள்கள் அடுப்பு மூட்டாமையால் அதையும் மற்ற மண்பகுதி போலவே கொண்டு எலி வளை தோண்டிக் குடியிருக்கின்றதாம். அதனைப் பிடிப்பதற்காகப் பூனை அடுப்பைக் கிண்டுகின்றதாம். வறுமைக் கொடுமையைச் சொல்லுவது இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்