சொல் பொருள்
(வி) உயர், மேல்நோக்கிச்செல்,
சொல் பொருள் விளக்கம்
உயர், மேல்நோக்கிச்செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rise, move upwards
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் – பெரும் 79,80 ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும், உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே – செல்கின்ற அரா அணர் கயம் தலை தம்முன் – பரி 15/19 பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மெல்லிய தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்