சொல் பொருள்
(வி) நிமிர்ந்து பார், அண்ணாந்து பார்,
சொல் பொருள் விளக்கம்
நிமிர்ந்து பார், அண்ணாந்து பார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hold the head erect, look upward
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர – பரி 1/1,2 ஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் (ஆதிசேடனின்) அரிய தலைகளும் சினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் நிமிர்ந்துநிற்க, குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு – குறு 128/1-3 கிழக்குக் கடலின் அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள அயிரைக் கூட்டத்தை எண்ணி தலையைத் தூக்கிப் பார்த்தாற்போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்