சொல் பொருள்
உள்நாக்கு
சொல் பொருள் விளக்கம்
அண் என்பது மேல் என்னும் பொருளது. நாக்கின் மேலே ஒரு குறுநாக்கு இருப்பது எவரும் அறிந்தது. அது, அண்ணாக்கு எனப்படும். அதில் நீர் அல்லது குடிப்புப் படுமாறு தூக்கிக் குடித்தல் அண்ணாக்கக் குடித்தல் என வழங்கும். நாக்கைப் போல் மேல்நாக்கு வெளிப்பட வராமையாலும் தெரியாமையாலும் உண்ணாக்கு (உள்நாக்கு) எனவும் படும். இது தென்மாவட்ட வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அருமையான பதிவு நன்றிகள் கோடி