Skip to content

சொல் பொருள்

(பெ) அதரி கொள்ளுதல் – கதிரடித்துக் கடாவிடுதல்,

சொல் பொருள் விளக்கம்

அதரி கொள்ளுதல் – கதிரடித்துக் கடாவிடுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

threshing out grain by making bulls or buffalloes walk on them circularly
after beating the sheaves on a hard surface

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெல்லை அறுவடை செய்து, தலையடி முடிந்தபின், நெற்கதிர்களை வட்டமாகத் தரையில் பரப்பி, அவற்றின் மீது பூட்டப்பட்ட எருதுகளை வட்டமாக வரச்செய்வர். எருதுகள் மிதிப்பதால் நெல்மணிகள் உதிரும். இதனைக் கடாவிடுதல் என்பர். இதுவே அதரி கொள்ளுதல்.

அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94

கடாவிடுகின்றவர் எருதுகள் பூண்ட தெளிந்த மணியோசை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *