அனிச்சம் என்பது ஒரு மென்மையான மலர் பூக்கும் தாவரம்
1. சொல் பொருள்
(பெ) ஒரு மென்மையான மலர்,
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு மென்மையான மலர், இது முகர்ந்ததும் வாடிவிடும் என்பர். மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது. நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது
இலக்கியங்களில் அனிச்சத்திற்காக கையாளப்பட்டுள்ள அடைமொழிகள்.
- மோப்பக் குழையும்
- நன்னீரை வாழி
- பஞ்சி அடர்
- அலர் தலை
- அம் மெல்
- ஆவா
- அனிச்சப்பூக் கால்களையாள்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a delicate flower, Anagallis arvensis, Scarlet pimpernel, lagerstroemia flos-reginae, Impatiens balsamina, Lagerstroemia speciosa, Exacum pedunculatum, Rhinacanthus nasutus, Biophytumsen sitivum
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஒண் செம்காந்தள் ஆம்பல் அனிச்சம் – குறி 62
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம்
புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த
தெரி மலர் கண்ணியும் தாரும் – கலி 91/1-3
மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்க குழையும் விருந்து - குறள் 9:10
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் - குறள் 112:10
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள் 112:1
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை - குறள் 112:5
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும் - சிந்தா:1 134/1 அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை - சிந்தா:1 231/3 அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி - சிந்தா:3 745/1 அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை - சிந்தா:13 2667/3 அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி - சிந்தா:13 2701/3 அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து - சிந்தா:3 606/1 அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக - சிந்தா:3 617/2 அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி - சிந்தா:13 2939/1 பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று - சிந்தா:1 341/1 அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும் - சிந்தா:12 2454/1
ஒண் செம்காந்தள் ஆம்பல் அனிச்சம்/தண் கய குவளை குறிஞ்சி வெட்சி - குறி 62,63
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம்/புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த - கலி 91/1,2
பிறை ஒண் வடிவம் தேய்த்து ஒளி சூழ் பிலிற்றும் அனிச்ச பதத்தாளும் - தேம்பா:12 4/1
அருத்தியொடு மனத்து ஓங்கி அனிச்சையில் நொய் அடி சிரம் மேல் அணுகி சேர்த்தி - தேம்பா:11 116/1
நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறடி - தேம்பா:9 101/2
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் - திருக்கோ:228/1,2 அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த - திருக்கோ:211/2 அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட - திருப்:29/1
அனிச்ச கோதையும் ஆய் பொன் சுண்ணமும் - உஞ்ஞை:42/71
அணி நிற அனிச்சம் பிணி அவிழ்ந்து அலர்ந்த - நரவாண:1/134
அனிச்சமும் அசோகமும் அடர அலைத்து - உஞ்ஞை:51/52
மகிழும் பிண்டியும் வரி இதழ் அனிச்சமும்
வேங்கையும் ஆவும் விளவும் வேயும் - இலாவாண:12/12,13
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் - பால:22 14/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்