Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு பறவை, 

சொல் பொருள் விளக்கம்

ஒரு பறவை,

சங்க இலக்கியங்களில் 17 முறை இப்பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்துப்பாட்டு நூல்களுள், குறிஞ்சிப்பாட்டில் (அடி 219) இது குறிப்பிடப்பட்டுள்ளது
எட்டுத்தொகை நூல்களுள்,
நற்றிணையில் 5 முறையும் (பாடல்கள்:124,152,218,303,335)
குறுந்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 160,177,301)
கலித்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 129,131,137)
அகநானூற்றில் 5 முறையும் (பாடல்கள் 50,120,260,305,360)
இப் பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குறிப்புகளின்படி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a bird

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இப்பறவை மிகப்பெரும்பாலும் ஆண்-பெண் என்று இணையாகவே வாழும்

ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13

இப்பறவைகள் மிகப்பெரும்பாலும் பெண்ணை என்ற பனைமரத்தில் தங்கும்.

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11

இவை வளைந்த வாயை (அலகுகளை)க் கொண்டிருக்கும்.
எனவே இவை மடிவாய் அன்றில் , கொடுவாய் அன்றில் என அழைக்கப்படுகின்றன

கொம்பு ஊதுவதைப் போன்ற ஒலியை எழுப்பும். இதனை நரலுதல் என்போம்.

ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220

அன்றிலும் பையென நரலும் – குறு 177/4

இவை இரவில் கூவமாட்டா

இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28

இவற்றின் கால்கள் கருமையாக இருக்கும்
எனவே இவை கருங்கால் அன்றில் (குறு 301/3) எனப்படுகின்றன.

மாலையில் இவை துணையுடன் புணரும்

செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்
எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/6,7

இப்பறவையில் இருவகை உண்டு என்பர்.
ஒருவகைக்குத் தலை சிவப்புநிறமாக இருக்கும்.

நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/1,2

இது Red-naped ibis அல்லது Pseudibis papillosa எனப்படும்.
முழுதும் கருப்பான அடுத்தவகை
Plegadis falcinellus எனப்படும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *