சொல் பொருள்
பூசுதல், கையால் அடிக்கும் அடி
சொல் பொருள் விளக்கம்
பூசுதல் என்னும் பொருளது. சுவரில் கலவையை அப்புதல். மார்பில் சந்தனம் அப்புதலும் உண்டு. கன்னத்திலோ முதுகிலோ கையால் அடிக்கும் அடியை அப்புதல் என்பதும் வழக்கு. “இரண்டு அப்பு அப்பினால் தான் சொன்னது கேட்பான்” என்பதில் இப்பொருள் உள்ளமை காண்க. நெல்லை, முகவை வழக்கு இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்