சொல் பொருள்
(1) அமரர் என்பார் அடங்கியவர்.
(2)அமரர் என்பதும் வீரர் அல்லது பொருதுவோர்
(பெ) தேவர்,
சொல் பொருள் விளக்கம்
(1) அமரர் என்பார் அடங்கியவர். அடக்கமுடையவரை அமரிக்கை உள்ளவர் என்ப. (கலி. 1. உரைவிளக்கம். இளவழ.)
(2) அமரர் என்பது அமர் என்பதன் அடியாகப் பிறந்த குறிப்பு வினைப் பெயர். அமர் என்பது போட்டி – போர் எனும் பொருளில் வரும். அதனால் அமரர் என்பதும் வீரர் அல்லது பொருதுவோர் எனப் பொருள்படல் இயல்பாம். (தொல். பொருள். புறத்திணை. 26. ச.சோ.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
celestials
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200 தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்